பாடசாலை சென்ற நான்கு தமிழ் மாணவர்கள் (04) காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள்
இவ்வாறு மாயமான மாணவர்கள் சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் என நோர்வூட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனஞ்செயன் கஜரூபன், சுப்பிரமணியம் தனூஸ்கர், பார்த்தீபன் தியோஜன் மற்றும் அனூஜன் ஆகிய நான்கு மாணவர்களே காணாமற் போனவர்களாவர்.
மாணவர்களைத் தேடும் பணியில் காவல்துறை
காணாமல் போன மாணவர்களில் ஒருவரான அனூஜனின் தந்தை நோர்வூட் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் காவல்துறையினர் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.