முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவுக்கு குடியேறிகள் செல்ல பிரான்ஸ் வழங்கும் வாய்ப்பு!

பிரித்தானியாவுக்கும் (UK) பிரான்சுக்கும் (France) இடையில் உள்ள ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பை அபாயகரமான முறையில் சிறிய சிறிய (டிங்கி) படகுகளில் கடந்து பிரிதானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளின் தொகை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இவற்றை தடுக்கும் புதிய ஏற்பாடுகள் குறித்து பிரித்தானியாவும் பிரான்சும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

அத்துடன் சட்டவிரோதமாக கடல்வழியாக பிரித்தானியாவுக்கு நுழையும் குடியேறிகளை மீண்டும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் அதேவேளை பிரித்தானியாவில் குடும்பங்களைக் கொண்டுள்ள குடியேறிகளின் குடும்ப உறுப்பினர்கள் பிரான்சில் சட்டரீதியற்று வாழ்ந்தால் அவ்வாறானவர்களை சட்டரீதியாக பிரிதானியாவுக்குள் அனுப்பும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆங்கிலக் கால்வாய்

குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துகொள்ளும் வகையில் பிரித்தானியாவுக்கு சட்டரீதியாக அனுப்புவர்களின் அதேயளவு எண்ணிக்கையில் கடல்கடந்து செல்பவர்களை ஏற்றுக்கொள்வதற்காக முதற்கட்ட சம்மதத்தை பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கு குடியேறிகள் செல்ல பிரான்ஸ் வழங்கும் வாய்ப்பு! | France Offers Migrants The Chance To Go To Britain

கடந்த சனிக்கிழமை 11 சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயை கடந்து 656 பேர் பிரத்தானியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் ஆட்கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்த பிரான்சும் பிரிதானியாவும் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ள நிலையில் இந்த விபரங்கள் வந்துள்ளன.

பாதுகாப்பு பணியாளர்கள்

தற்போது பிரான்சின் கலே பகுதியை சுற்றியிருக்கும் கட்டளை மையங்களில் பிரித்தானியத் தரப்பிலும் பாதுகாப்பு பணியாளர்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவுக்கு குடியேறிகள் செல்ல பிரான்ஸ் வழங்கும் வாய்ப்பு! | France Offers Migrants The Chance To Go To Britain

பிரான்சை பொறுத்தவரை கூட்டாக ரோந்து பணிகளில் ஈடுபடுவது, மற்றும் பிரித்தானியா சார்பாக பிரான்சில் வைத்து புகலிட கோரிக்கைகளை பரீசிலிப்பது போன்ற பிரித்தானிய கோரிக்கைகளை நிராகரித்துள்ள நிலையில் தற்போது கலே பகுதியை சுற்றியுள்ள மையங்களில் பிரித்தானிய பாதுகாப்பு பணியாளர்களை அமர்த்த அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.