தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை நேரில் சந்தித்து
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு சுமந்திரனின் அலுவலகத்தில் நேற்றையதினம்(13) மதியம் நடைபெற்றுள்ளது.
அரசியல் நிலைமை
இது தொடர்பில் சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் லெமி லம்பேட் மற்றும் பிரதித் தூதுவர்
மத்தியு ஜோன் ஆகியோர் இன்று மதியம் எனது கொழும்பு அலுவலகத்துக்கு வருகை தந்து
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடினர்.
அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகள், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும்
நல்லிணக்கம் சம்பந்தமாக நீண்ட உரையாடலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.” என குறிப்பிட்டுள்ளார்.

