முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆட்சியமைக்க பல சபைகளில் தொங்கு நிலை : கஜேந்திர குமார்

தம்பலகாம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விகிதாசர முறையில்
ஒருவர் தெரிவாகிய நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்ற
இடத்தில் எங்களுடைய ஆதரவை நாடி பல தரப்புக்கள் தங்களுடைய கோரிக்கைகளை
முன்வைத்திருக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

தம்பலகாமம் பகுதியில் நேற்று (17) மாலை இடம் பெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவேந்தலை அடுத்து கஞ்சி பகிரும் நடவடிக்கை இடம் பெற்றது.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த விடயங்களை நேரடியாக இங்கு
இருக்கக் கூடிய மக்களுடன் பேசி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்று தமிழ்
தேசிய பேரவையின் மத்திய குழுவுடன் தீர்மானிக்கவுள்ளோம்.

மேலும், தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையின் கடைசி நாளுக்கு முந்தைய நாள்.

அந்த வகையில் இவ்வாரம் முழுவதும் தமிழர் தாயக நிலப் பரப்பில் ஒரு சோகமான
வாரமாக கடைப் பிடித்து முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற பொருளாதார தடைகள் மற்றும்
அனைத்து விதமான தடைகளையும் மீறி அந்த மக்கள் ஏதோ ஒரு வகையில் உயிரை தக்க வைக்க
கஞ்சி குடித்ததன் ஊடாக அது மட்டும் தான் அவர்களுக்கு உணவாக இருந்தது.

இதன்படி, இனப்படுகொலையின் நினைவாக இவ்வாரம் முழுவதும் வடகிழக்கில் உள்ள தமிழர்
பகுதிகளில் முப்ளிவாய்க்கால் கஞ்சி காய்த்து எங்கள் மக்களுடன் பகிர்ந்து
கொள்வது வழக்கம்.

முல்லைத் தீவு முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதை போன்று மிக
மோசமான நிலைமை தென் தமிழ் தேசத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடைபெற்றது இதனை
ஒவ்வொரு வருடமும் அந்த நினைவாக வாகரையில் நினைவு கூறுவது வழக்கம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.youtube.com/embed/u3zMwY1zWos

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.