முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணேமுல்ல சஞ்சீவ கொலை – செவ்வந்தியின் தாய் – சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான பெண் சந்தேக நபரின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு குற்றவியவில் பிரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை - செவ்வந்தியின் தாய் - சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Ganemulla Sanjeewa Murder Senvanth Family Arrested

கொழும்பு (Colombo) குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24.2.2025) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலதிக விசாரணை

கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை - செவ்வந்தியின் தாய் - சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Ganemulla Sanjeewa Murder Senvanth Family Arrested

கொலைச் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பின்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க (23) மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி (48) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல அதிகாரிகளிடம் விசாணை 

கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை - செவ்வந்தியின் தாய் - சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Ganemulla Sanjeewa Murder Senvanth Family Arrested

குறித்த விடயத்தை இன்று (24) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையுடன் தொடர்புடைய சிலரை ஏற்கனவே கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

You may like this

https://www.youtube.com/embed/zRrdBTAkKvs

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்