ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக தமது விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை (SLAF)
விளக்கமளித்துள்ளது.
இலங்கை விமானப்படை ‘x’ இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி, கட்டண அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு விமானங்கள் வழங்கப்படுகின்றன என்பதை SLAF தெளிவுபடுத்தியது.
பிரச்சார நடவடிக்கை
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் விமானங்களைப் பயன்படுத்துவது சமீபத்தில் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
Recently, there have been media reports about alleged misuse of SLAF aircraft for campaigning by presidential candidates. We wish to clarify that aircraft are provided to candidates on payment basis as per the standard procedure.#SLAFMEDIA
— Sri Lanka Air Force (@airforcelk) September 17, 2024
இதேவேளை கடந்தவாரம், இலங்கை விமானப் படைக்கு (Sri Lankan Air Force) சொந்தமான பெல் 412 ரக உலங்குவானூர்தி பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எப்பாவல பகுதியில் வைத்து உலங்குவானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தரையிறக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச நிதி மற்றும் வளங்கள் பயன்படுத்தப்பட்டதாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.