முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீட்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு அலுவலகங்கள் அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கப் பணத்தில் பராமரிக்கப்படும் இந்தச் சொத்துக்களை, பொதுமக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு கிடைத்த வெற்றி
ஒரு குடும்பத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க வீடுகளை, முழு மக்களின் நலனுக்காக பயன்படுத்துவது மக்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் வகையில் இந்தக் கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் எடுக்க வேண்டும்.

