இலங்கையின் அரசியல் வரலாற்றில், அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரச ஊழியர்கள்
சுதந்திரமாகவும், சட்டப்பூர்வமாகவும் தங்கள் கடமைகளைச் செய்வதற்கான சூழல்
உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி
அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூடடம் நேற்று (07), கந்தளாய் பிரதேச செயல
கேட்போர் கூடத்தில், அவரது தலைமையின் கீழ், நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “கந்தளாய் சூரியபுரயில் உள்ள மகாவலி ஆற்றின் சிறிமங்கல பகுதியில் சட்டவிரோத
மணல் அகழ்வு இடம்பெற்று வருவதற்கு அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதிகளவான செலவுகள்
இந்த சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக, சூரியபுர, சமனலபாலம், சமகிபுர போன்ற
பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் வெள்ளப் பாதுகாப்பு அணை சேதமடைந்து
வருவதாகவும், இந்த பாதுகாப்பு அணையை மீண்டும் புனரமைக்க அரசாங்கம் பெரும்
செலவுகளைச் தற்போது செய்கின்றது என்றும் விவசாய அமைப்புக்களிடம் கூறி வைக்க
விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பேராறு பகுதியில் உள்ள வடிகான் அப்பகுதி மக்கள் வாழ்வுக்கு தீங்கு
விளைவிக்கும் வகையில் காணப்படுவதாகவும், இதற்கான தீர்வுகள் காலம்
தாழ்த்தப்படுவது ஏற்க முடியாதது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தளாய், சூரியபுர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை தாக்குதல்
அதிகரித்ததன் காரணமாக, விவசாயிகள் அச்சத்தில் வாழ்கிறார்கள். பயிர்கள்
அழிவதுடன், மனித உயிர்களும் அபாயத்தில் உள்ளன. இது குறித்து வனவள பாதுகாப்பு
திணைக்களம் உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போது பிரதேச மக்களால்
முன்வைக்கப்படுகின்ற, சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான உண்மை நிலைகளை
பரிசீலிக்குமாறும், அது சம்பந்தமான முழுமையான அறிக்கையை அடுத்த பிரதேச குழு
கூட்டத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு புவியியச் சரிதவியல் பொறியியலாளரை
அறிவுறுத்தினார்.
அதேவேளை இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைமுறையில் இருப்பது தொடர்பாகவும் இங்கு
பேசப்பாட்டதோடு,
கந்தளாய் வைத்தியசாலையின் சேவைகள், மருந்து பற்றாக்குறை, மருத்துவ
உபகாரணங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த முந்திய கோரிக்கைகள் என பல
பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

