முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம்

தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பழிவாங்க முயற்சிக்கும் அரசாங்கம் 

இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது நாம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் வழக்குகளை ஜோடித்து சாட்சியங்களை உருவாக்கி பழிவாங்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாரை கைது செய்ய வேண்டும் என்பது குறித்து இரவு கலந்துரையாடி கைது செய்யும் நிலை காணப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அரசாங்கம், அரசியல்வாதிகளை பழிவாங்குவதற்கும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கும் முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம் | Government Taking Revenge On Us  

நாடாளுமன்றத்தில் தாம் மக்களுக்காக குரல் கொடுத்து விமர்சனங்களை வெளியிடும் நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களை அரசாங்கம் பழிவாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சகோதரர் யோஷிதவை கைது செய்வதற்கு பெலியத்த வரையிலும் பல வாகனங்களுடன் விரட்டிச் சென்று கைது செய்தமை அனாவசியமான விடயம் என அவரை சுட்டிக்காட்டி உள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்கு வருமாறு அழைத்திருந்தால் தாமாகவே முன்வந்து வாக்குமூலம் அளித்திருப்பார் எனவும் இதற்கு எரிபொருள் செலவிட்டு வாகனங்களில் பெலியத்த வரைச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம் | Government Taking Revenge On Us  

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முக்கிய பதவி வகித்தவரே தற்பொழுது பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கின்றார் எனவும் அவர் தனது அரசியல் பழிவாங்கல்களை தொடர்வதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்தி ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாங்கள் எந்தவிதமான குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் முடிந்தால் தம்மை சிறையில் அடைக்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க அமைச்சரவையிலும் காணிகளை பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குற்றம் செய்திருந்தால் விசாரணை நடத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம் | Government Taking Revenge On Us

மேலும், அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது நாம் இல்லை எனவும் தேங்காய் சம்பல் சாப்பிடுவதனை தேசிய குற்றம் ஆக்கியவர்கள் தாங்கள் இல்லை எனவும் அவர் கூறினார். 

அத்துடன், இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை தடுத்து நிறுத்தவோ தட்டிப் பறிக்கவோ முயற்சிக்கப் போவதில்லை எனவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களே அதனை தீர்மானிப்பார்கள் எனவும் தேர்தலின் ஊடாகவே ஆட்சியை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.