தமிழரசுக்கட்சிக்குள் சிறிதரன் பிரிவு தாயக மைய அரசியலையும், சுமந்திரன் பிரிவு கொழும்பு மைய அரசியலையும் முன்னெடுத்து வருகின்றது என பலதரப்பட்டாலும் கருத்துக்கள் வலுத்து வருகின்றன.
மேலும், கொழும்பு மைய அரசியல் தென்னிலங்கை கட்சிகளின் ஊடுருவலை தமிழர் தாயகத்தில் அதிகரிக்கச் செய்யும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழரசுக் கட்சி பிளவுபடுவதை தமிழ் மக்கள் ஒருபோதும், விரும்பவில்லை.
இதற்கு பிரதான காரணம், ஒரு பாரம்பரிய வடக்கு, – கிழக்கை தளமான கொண்ட கட்சி சிதைந்து போவதை மக்கள் ஏற்காமையே.
மேலும், இன்று அக்கட்சி ஒரு முக்கிய தலைவரான மாவை சேனாதிராஜாவையும் இழந்துள்ளது.
இவ்வாறான நிலையில், தமிழ் அரசியல் பரப்புக்குள் காணப்படும் சர்ச்சைநிலைகளையும், எதிர்கால தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்கிறது ஜபிசியின் உண்மையின் அலசல்…

