பவன் கல்யாண் ஆந்திர அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்ததுடன், சினிமாவிலிருந்து சில வருடம் விலகியிருந்த நிலையில், தற்போது ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் பிரமாண்டமாக இன்று வெளிவர, இப்படம் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
பவன் கல்யான் வீர மல்லு திருடுவதில் கெட்டிக்காரர், அதாவது சிவாஜி ரஜினி போல் இருப்பவர்களிடமிருந்து திருடி, இல்லாதவர்களுக்கு தானம் தர்மம் செய்யும் நல்லவர் தான் இந்த வீர மல்லு.
இவர் நவாப்-க்கு வரவேண்டிய வைரங்களையெல்லாம் இவர் கொள்ளையடித்து வர, ஒரு கட்டத்தில் நவாப்பிடம் சிக்கி கொள்கிறார்.
நவாப்போ இவருக்கு தண்டனை கொடுக்காமல் வீர மல்லு திறமை அறிந்து, அட இவனை வைத்து நாம் இன்னும் சாதிக்கலாமே என கோஹினூர் வைரத்தை திருட கட்டளையிடுகிறார்.
அதுவோ அவுரங்கசீப்-டம் இருக்க, அதை வீரமல்லு கொள்ளையடித்தாரா, அவுரங்கசீப்-க்கும் இவருக்கும் என்ன பிரச்சனை? அதன் தீர்வு என்ன என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பவன் கல்யான் வீர மல்லுவாக ரசிகர்களுக்கு செம விருந்து வைத்துள்ளார், சொல்ல போனால் படமே ஒன் மேன் ஷோ தான், முழுப்படத்தையும் பவன் கல்யாணே தாங்கி நிற்கிறார். குஸ்தி சண்டை ஆரம்பித்து கிளைமேக்ஸ் பிரமாண்ட சண்டையில் கத்தி சண்டை வரை தன்னால் முடிந்த அளவு தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
நிதி அகர்வால் அழகாக உள்ளார், அவரை காதலிக்க போய் பிரச்சனையில் சிக்கும்படி ஹீரோயினுகான வேலையை வந்த நேரத்தில் செய்து செல்கிறார்.
அவுரங்கசீப்-ஆக பாபி தியோல், ஒரு காலகட்டத்திற்கு ஒரு பாலிவுட் ஹீரோவை வில்லனாக்குவார்கள், அப்படி தான் இந்த கால கட்டதிற்கு பாபி தியோல் போல, அவரும் கம்பீரமாக தனக்கான இடங்களில் மிரட்டுகிறார்.
1600 களில் நடப்பது போல் கதைக்களம் என்பதால் செட்-ற்கு பெரிய செலவு செய்திருப்பார்கள் போல, நன்றாக உள்ளது செச் ஒர்க் எல்லாம், அதே நேரத்தில் மரகதமனி இசையும் கூடுதல் பலம்.
படத்தின் முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும், இண்டர்வெல் வரும் திருப்பம் வரைக்குமே படம் நன்றாகவே செல்கிறது, ஆனால் இரண்டாம் பாதி பல காட்சிகள் செம இலுவையாக சென்று நம் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது.
க்ளாப்ஸ்
பவன் கல்யாண் ஒன் மேன் ஷோவா கலக்கியுள்ளார்.
முதல் பாதி மற்றும் சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, அதிலும் ஜவ்வு போல் செல்லும் திரைக்கதை.
மொத்தத்தில் முதல் பாதி போலவே இரண்டாம் பாதி-யும் அமைந்திருந்தால் கண்டிப்பாக இந்த வீர மல்லு மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பார்.