முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரு சூரியகாந்தி விதையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஆரோக்கியமான விதைகளில் சூரியகாந்தி விதையும் ஒன்று. இதில் நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

சூரியகாந்தி விதையில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

சூரியகாந்தி பூவின் மையப் பகுதியில் உள்ள சூரியகாந்தி விதைகளைச் சாப்பிடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

நீரிழிவு நோய் 

சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

ஒரு சூரியகாந்தி விதையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Health Benefits Of Eating Sunflower In Tamil

இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க

சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

இதில் அழற்சி எதிர்ப்பு ஃபிளவனாய்டுகள், பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து உட்கொள்வது இதயம் தொடர்பான நோய் அபாயத்தைக் குறைப்பதுடன் இதயத்தை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இது காயங்களை விரைவில் குணமாக்கலாம்.

ஒரு சூரியகாந்தி விதையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Health Benefits Of Eating Sunflower In Tamil

மலச்சிக்கல் பிரச்சனை

இன்று பலரும் நீண்ட நாள்களாக மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் உணவில் சூரியகாந்தி விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும் இது தசை வலியை எளிதாக நீக்குகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் உடல் சோர்வை எளிதில் நீக்கலாம்.

ஒரு சூரியகாந்தி விதையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Health Benefits Of Eating Sunflower In Tamil

மேலும் இதில் அதிகளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. இது உடல் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த வழிகளில், சூரியகாந்தி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

எனினும் ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின் மருத்துவ ஆலோசனைக்கு பிறகே இதை உட்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.