கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளில் வெற்றிடமாக உள்ள பணிப்பாளர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் அவசரமாக நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
விண்ணப்ப காலம் ஜூலை 27ஆம் தேதியுடன் முடிவடைந்ததாகவும், எதிர்வரும் வாரங்களில் நேர்முகத்தேர்வுகள் நடைபெறும் என்றும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி (Hansaka Wijemuni) தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் உள்ள பல பிரதி பொதுப் பணிப்பாளர் பதவிகளுடன், பல முக்கிய மருத்துவமனைகளில் வெற்றிடமாக உள்ள பணிப்பாளர் பதவிகளும் உடனடியாக நிரப்பப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சுகாதார நிர்வாகத் துறை
தற்போது, பல தற்காலிக பணிப்பாளர்கள் இந்தப் பதவிகளில் பணியாற்றி வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நியமனங்கள் சுகாதார நிர்வாகத் துறையை மேலும் முறையாகவும் திறமையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன பிரதி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

