திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.
இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.


மாஸ் ஹிட் கொடுத்த டிராகன் படம்.. 1 வருட திரைப்பயணத்தை 1 நிமிட வீடியோவாக வெளியிட்ட இயக்குநர்
விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான்.
பின் உடல் நிலை காரணமாக விலகி இருந்த dd தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் திவ்யதர்ஷினி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” நான் என் கல்லூரி படிப்பை முடித்த பின் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பலர் எனக்கு பலவிதமாக அட்வைஸ் கொடுத்தனர்.

நமது செல்ப் கான்ஃபிடன்டை உடைக்கும் வகையில் அட்வைஸ் என்ற பெயரில் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையை சென்று பார்த்தால் அதை சொல்லவே முடியாது அந்த அளவிற்கு மோசமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

