முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் : சிறீதரன் எம்.பி

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று  புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிப்படுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்போடும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள் : மனோ கணேசன்

பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள் : மனோ கணேசன்

கட்சிக்கு எதிரான வழக்கு

மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கட்சியின் இயக்கத்தை முடக்கி, உட்கட்சி ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்தி, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பில் கருத்துரைக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தலைமைப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால் என்னை இன்று நீதிமன்றில் நிறுத்தியிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கடந்தும்  கட்சியைத் தளம்பலற்றுக் கொண்டு செல்வதற்காக நான் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள், எதிர்கொண்ட சமரசப் பேச்சுகள், அதுசார்ந்து நான் முன்னெடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த விரும்புகிறேன். 

தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் : சிறீதரன் எம்.பி | I Hand Over The Future Of The T A K To People

அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசு கட்சியின் எதிர்காலத்தையும் கட்சித் தலைமையின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி எனது புரட்சிகர அரசியல் பயணத்தை  ஆரம்பிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான
மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சாந்தினி ,
மாகாண சபை அவைத்தலைவர்
சி. வீ.கே.சிவஞானம் , முன்னாள் தவிசாளர்கள் , தமிழரசு கட்சியின் மாதர்
முன்னணியினர் , இளைஞர் அணி , தொழிற்சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டுள்ளனர்.

உக்ரைன் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

உக்ரைன் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்: சஜித் வாக்குறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்: சஜித் வாக்குறுதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.