நடிகர் கலையரசன் பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து எல்லோரையும் கவர்ந்தவர். மெட்ராஸ் படத்தின் வரும் அன்பு ரோல் தொடங்கி வாழை படத்தில் வரும் கதாபாத்திரம் வரை அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
தற்போது அவர் மெட்ராஸ்காரன் என்ற படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். அதில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் தான் ஹீரோ.
இனிமேல் ஹீரோ மட்டும் தான்..
இந்நிலையில் இன்று மெட்ராஸ்காரன் படத்தின் விழாவில் பேசிய கலையரசன், ‘ஒரு கதாப்பாத்திரம் சாக வேண்டும் என கதை எழுதினால், அதற்கு என் பெயரை தான் எழுதிவிடுவார்கள் போல.’
‘இனிமேல் குறிப்பிட்ட கதைகளில் மட்டும் துணை நடிகராக நடிப்பேன். மற்றபடி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என கலையரசன் கூறி இருக்கிறார்.