தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு (R. Ilankumaranar) எந்த தகுதியும் இல்லை என அரசியல் செயற்பாட்டாளர்
கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) வைத்து இன்றைய தினம் (17.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தவர்கள் தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்கள், இவர்கள் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நேற்று (16.04.2025) குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும் என்றும் பதிவுசெய்திருந்தார்.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இளங்குமரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் கருத்து தெரிவித்தார்.
தென்மராட்சி மண் என்பது தமிழ் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் விலை போனதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென்மராட்சியின் இரண்டு பிரதேச சபைகளை நீங்கள் கைப்பற்றும் பட்சத்தில் தாங்கள் அரசியலிருந்து விலகுவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க…
YOU MAY LIKE THIS
https://www.youtube.com/embed/-4huQZl15Pchttps://www.youtube.com/embed/uMrivViy4BY

