முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய விவகாரம்: ரோஸி சேனாநாயக்க விளக்கம்

அரச வாகனங்களை முறைக் கேடாக பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படுவதாக முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில்,

வாகனங்களைப் பற்றி சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் குற்றம்சாட்டப்படுவது மூன்று பெண்கள் மாத்திரமே. ஊடகங்களும் இதை சரியாக ஆராய வேண்டும்.

தேர்தலின் போது, என் மீது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு, அவதூறாகப் பேச முயன்றனர்.

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய விவகாரம்: ரோஸி சேனாநாயக்க விளக்கம் | Illegal Use Of Government Vehicles Rosy Senanayaka 

உத்தியோகபூர்வ வாகனங்கள்

கடந்த ஆண்டு என்னிடம் வழங்கப்பட்ட கார் மிகவும் பழுதடைந்த ஒன்றாகும்.

எனக்கு எட்டு வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்டன. இதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகரான பின்பு இந்த குறிப்பிட்ட வாகனமே எனக்கு வழங்கப்பட்டது.

கூடிய காலம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் என்பதால் அதனை நான் வேண்டாம் என்றேன்.

இருப்பினும், வேறொரு வாகனம் வழங்கப்படும் வரை இதனை பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு குறிப்பிட்டு சொல்லும் வாகனம் மிகவும் பழுதடைந்த வாகனமாகும். முன் கதவுகளில் இருந்து தண்ணீர் கசிந்த நிலையிலேயே நான் அதனை பயன்படுத்தினேன்.

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய விவகாரம்: ரோஸி சேனாநாயக்க விளக்கம் | Illegal Use Of Government Vehicles Rosy Senanayaka 

எரிபொருள் செலவும் அதிகம். இது என் பெயரில் வாங்கிய கார் அல்ல. அரசு கொடுத்த வாகனமாகும்.

இந்த வாகனங்களை மட்டும் குறிவைத்து என்மீது சேறு பூசும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுகின்றனர்.

நான் செய்த வேலைகள் கொழும்பு மக்களுக்குத் தெரியும்

இந்த வாகனத்தை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறியுமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுபற்றி மக்களும் அறிந்து கொள்ளலாம்” என ரோஸி சேனாநாயக்க மேலும் தொிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.