சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச வினவியுள்ளார்.
இது தொடர்பில் தெற்கு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பசில் ராஜபக்ச உள்ளார்.
லண்டன் வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! 25000 பவுண்ட் இழந்த பெண்
நாடாளுமன்ற தேர்தல்
ஏனைய கட்சிகள் அது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் உள்ளன என்று அறிவதற்கு அவருக்கு விருப்பம்.
இலங்கைத் தமிழர்களின் தனித்துவ பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம்
முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என்று பசில் வினவியுள்ளார்.
எனினும், எடுத்த எடுப்பிலேயே ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்று தூது கொண்டு வந்தவரிடம் சஜித் மற்றும் சம்பந்தன் தரப்பினர் செய்தி அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் : நம்பிக்கை தெரிவித்த சிறீரங்கேஸ்வரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |