இந்தியன் 2
கடந்த வாரம் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களில் இப்படம் சிக்கியது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அல்லு அர்ஜுன் புஷ்பா 2 இயக்குனருடன் சண்டையா? வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
படத்தின் நீளம் விமர்சன ரீதியாக இந்தியன் 2விற்கு பின்னடைவை கொடுக்கின்ற காரணத்தினால், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகளை நீக்கி, நேற்றில் இருந்து புதிய வெர்ஷன் இந்தியன் 2 திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
வசூல்
முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பி இந்தியன் 2 அதற்கடுத்தடுத்த நாட்களில் சற்று பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்க துவங்கியது. இந்த நிலையில், 6 நாட்களை கடந்துள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.
இதுவரை உலகளவில் இந்தியன் 2 திரைப்படம் ரூ. 138 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்த்த இந்தியன் 2 திரைப்படம் இனி வரும் நாட்களில் எப்படி வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.