நீண்ட காலமாக உலகளாவிய பாதுகாப்புக்கு, ஈரான்(iran) அச்சுறுத்தலாக இருந்து வருவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (rishi sunak)தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிஷி சுனக் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
உலகளாவிய பாதுகாப்புக்கு, ஈரானிய ஆட்சி, நீண்ட காலமாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
தீர்க்கமாக செயற்பட்டு வரும் இஸ்ரேல்,அமெரிக்கா
ஈரானின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலும், அமெரிக்காவும் தீர்க்கமாக செயல்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம்.
The Iranian regime has long been a threat to regional and global security.
The prospect of Iran having a nuclear weapon is unacceptable.
Israel and the US have acted decisively to address this threat, and deserve our support and thanks for their efforts.
— Rishi Sunak (@RishiSunak) June 22, 2025

