இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்ட போது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகை தராமல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து பதவி விலகியவர் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் (R.Shanakiyan) கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, செயற்குழு கூட்டமானது போர்க்களமாக மாறிய நிலையில், கூட்டத்தை மாவை தலைமையில் நடத்த முடியாது என சாணக்கியன் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இவ்வாறு கட்சியின் மூத்த மற்றும் கட்சியின் தவைவரை சாணக்கியன் கடும் தொனியில் விமர்ச்சித்தமையானது சர்ச்சைக்குரிய விடயமாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/fXYfjmxrazk