முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் அதிரடி அறிவிப்பு

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களிலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய
வேண்டிய நிலைமை ஏற்படலாம் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் சுட்டிகாட்டியுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் (23.12.2024)  யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை
விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என்றும்  ஆசிரியர்கள் இதன்போது அளுநரிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள்

வெளி மாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுவதாகவும் செல்வாக்குகளின்
அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர் எனவும்
சுட்டிக்காட்டிய அவர்கள், தமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த
இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக
ஆளுநரிடம் முறையிட்டனர்.

வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் அதிரடி அறிவிப்பு | Jaffna District Teachers Annual Transfer 2025

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த
ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும் எனவும், அவ்வாறு இதுவரை பணியாற்றாத ஆசிரியர்கள்
இருப்பின் உரிய நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்
என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வெளி மாவட்டங்களிலிருந்து யாழ். மாவட்டத்துக்கு ஆசிரியர் ஒருவர்
இடமாற்றப்படும்போது அதே பாடத்துக்குரிய ஆசிரியர் வெளிமாவட்டத்துக்கு
விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உரிய காரணங்கள் இல்லாமல் இடமாற்றங்களை வழங்க முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள்
உரிய வகையில் பின்பற்றப்படும் எனவும் ஆளுநர் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.