இலங்கையின் அறுகம்பே பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் கிடைத்த போதிலும், தற்போதைய அரசாங்கம் செயற்படாமல் இருப்பது குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தை அவர் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “சாத்தியமான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு அரசாங்கம் ஏன் விளக்கமளிக்கவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, சுற்றுலா வருமானம் நாட்டின் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும் என்று காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
According to the statement made by the Acting Chief of Police, the information on a possible attack was received by the GOSL on the 7th of October and was discussed at multiple security council meetings, investigated and precautions taken.
If the Government did have information…
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 24, 2024
அரசாங்கத்திடம் முன்கூட்டியே தகவல் இருந்திருந்தால், இராஜதந்திர தூதரகங்களுக்கு விளக்கியிருந்தால், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயண ஆலோசனை எச்சரிக்கையை தடுத்திருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அரசாங்கம் குறைந்தபட்சம் தற்போது இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும் மற்றும் இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்க வெளிநாட்டு தூதரகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியதை அடுத்து, அறுகம்பேயில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா உட்பட மேலும் பல நாடுகளும் இலங்கை தொடர்பான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன.
இதையடுத்து.
பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இலங்கையின் அறுகம்பே பகுதி மற்றும் தீவின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள ஏனைய கடற்கரைகளை உடனடியாக விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்திருந்தது.
மேலும், இலங்கையில் அறுகம்பே பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் தற்போது இரண்டு சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.