காத்தான்குடி (Kattankudy) வாழ் பொதுமக்கள் வீதி புனரமைப்பு மற்றும் வடிகான் அமைப்பு பூரணப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் மழை காலங்களில் இப் பிரதேசத்தில் வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வருடா வருடம் பல சொத்தழிவுகளையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்துவதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கிராம சேவகர் பிரிவுக்குள் பிரபல பாடசாலையான காத்தான்குடி மத்திய கல்லூரி, பெண்கள் சந்தை, மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல் என்பவற்றுடன் அதிகளவான பிரயாணிகள் இவ் மத்திய வீதியை பல்வேறு தேவைக்காக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
இதனால் மழை காலங்களில் பாதசாரிகள், பாடசாலை செல்லும் மாணவர்கள், மத அனுஷ்டானங்களுக்காக பள்ளிவாசல் செலபவர்கள் மற்றும் பல்வேறு தேவைக்காக இவ்வீதியைப் பயன்படுத்துவோம் மிகுந்த சிரமங்களையும், துன்ப துயரங்களை சந்திக்கவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீதியை புனரமைப்புச் செய்வதற்கு முன்னதாக, பகுதிவரை கட்டப்பட்டுள்ள வடிகானை மீன்பிடி இலாகா வீதியிலுள்ள வடிகானுடன் இணைத்து அழிவு மற்றும் நாசங்களிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.