பாலிவுட்டில் 2017ம் ஆண்டு Machine என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி.
அதன்பின் தெலுங்கிலும் படங்கள் நடித்தவர் அதிகம் ஹிந்தியில் தான் படங்கள் நடித்துள்ளார். கடைசியாக கியாரா அத்வானி, ராம் சரணுடன் இணைந்து நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
அடுத்து 2 படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
திருமணம்
கியாரா அத்வானி கடந்த 2023ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்துவந்த கியாரா இப்போது ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்துள்ளார்.
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் இருவரும் கியூட்டான போட்டோவுடன் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்கள்.
View this post on Instagram