கிங்ஸ்டன்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் கிங்ஸ்டன். இப்படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியிருந்தார்.
மேலும் இது ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாகும். இப்படத்தில் இவருடன் இணைந்து திவ்யபாரதி, இளங்கோ குமரவேல், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
[21HPDJ ]
மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வெளிவரும் வெறித்தனமான டிரைலர்!
ஃபாண்டஸி ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும். சிலர் இப்படம் ஓகே என விமர்சனம் கூறினாலும், பலரும் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளனர்.
முதல் நாள் வசூல் விவரம்
இந்த நிலையில், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ. 1.2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.