அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து தனக்கு எவ்வித அழைப்புக்களும் வரவில்லை என கலிபோர்னிய ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிடம் கெவின் நியூசமிடம் கடைசியாக எப்போது உரையாடினீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்போது, ஒரு நாள் முன்னதாக உரையாடினேன். அவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, இன்னும் திறமையாக செயற்பட வேண்டும் என கூறினேன்.
பொய்யான தகவல்..
மேலும், அவர் மோசமாக செயற்பட்டு வருகின்றார். இதன் காரணமாக நிறைய மரணங்கள் ஏற்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கெவின் நியூசம், அவ்வாறு தனக்கு எவ்வித அழைப்புக்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
There was no call. Not even a voicemail.
Americans should be alarmed that a President deploying Marines onto our streets doesn’t even know who he’s talking to. https://t.co/y7TJUhUZGI
— Gavin Newsom (@GavinNewsom) June 10, 2025
அத்துடன்,” எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு குரல் அஞ்சல் கூட கிடைக்கவில்லை.
நமது தெருக்களில் கடற்படையினரை நிறுத்தும் ஒரு ஜனாதிபதிக்கு அவர் யாருடன் பேசுகிறார் என்பது கூடத் தெரியாது என்பது அமெரிக்கர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்” என வேண்டும் என நியூசம் கூறியுள்ளார்.

