கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற் கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் வரவு மற்றும் செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இறுதித் திகதியொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்து, அறிவித்தல் விடுத்திருந்தது.
எனினும் உரிய திகதிக்கு முன்னதாக தங்கள் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிப்பதில் அலட்சியம் காட்டிய 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
அதன் பிரகாரம் குறித்த வேட்பாளர்களுக்கு எதிரான மேலதிக சட்டநடவடிக்கைகளை தொடரும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்தவுடன் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

