முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் உட்பட இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோய்

இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்ததுடன் யாழில்(jaffna) சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில்(sri lanka) தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை) காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சிகளை பாராட்டுகிறேன்.

இலங்கையில் தொழுநோய்

இலங்கையில் தொழுநோய் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்காமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் உட்பட இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோய் | Leprosy On The Rise In Sri Lanka Including Jaffna

ஆரம்ப காலங்களில் சரியான மருந்து இன்மை, மற்றும் முறையான ஆற்றுப்படுத்தல் இன்மை காரணமாக தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திக்கும் வாய்ப்புகள் காணப்பட்டது.

ஆனால் தற்போது தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்காமல் இருப்பதற்கும், வைத்தியசாலையில் கிடைக்கக் கூடிய இலவச மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் தொழுநோயாளர்கள் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்கின்றமை வரவேற்கதக்கது.

பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு 

மேலும் இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தொழுநோயாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான புதிய அணுகுமுறைகளை உருவாக்கி பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.

யாழ்ப்பாணம் உட்பட இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோய் | Leprosy On The Rise In Sri Lanka Including Jaffna

அது மட்டுமல்ல கிராமிய ரீதியிலும் தொழுநோயாளர்கள் மற்றும் விழிப்புணர்வு சார் அக்கறை ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சங்கானை பகுதியில் அதிகளவான தொழு நோயாளர்கள் இருப்பதை அறியும் போது வருத்தமளிக்கிறது.

உரிய காலத்தில் சரியான மருத்துவம்

உரிய காலத்தில் சரியான மருத்துவம் மேற்கொள்ளும் போது தொழு நோயை முற்றாக தடுக்க முடியும் என்ற போதிலும் கூட, உள்ளூர் வைத்தியர்களின் பாரம்பரிய முறைசாரா வைத்திய முறைகளை பின்பற்றி நோயின் தாக்கம் அதிகரிக்கும் தன்மையும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் உட்பட இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோய் | Leprosy On The Rise In Sri Lanka Including Jaffna

எனவே அரச வைத்தியசாலைகளில் முறையாக கிடைக்கப்பெறும் இலவச வைத்திய உதவிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக தொழுநோயிலிருந்து முறையாக விடுதலை பெறலாம் என்பதை உணர வேண்டும்.

எனவே வைத்தியதுறையில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடம் சார்ந்தவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.