Courtesy: Sivaa Mayuri
இலங்கை தனது நிதி நெருக்கடியிலிருந்து வெளிவர வேண்டுமெனில், அதன் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னைய அரசாங்கங்களால் பெறப்பட்ட கடன்களை அடைக்க மறுக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
தமது கட்சியினர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை சந்தித்ததாக குறிப்பிட்ட அவர், ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச அல்லது கோட்டாபய ராஜபக்சவினால் பெறப்பட்ட கடனை செலுத்த முடியாது என்று தாம் கூறவில்லை என்பதை அவர்களிடம் தெளிவுப்படுத்தியதாக கூறியுள்ளார்.
ஒரு நாடாக அதை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தமது எதிர்கால அரசாங்கம் இருப்பதை தாம் தெளிவுப்படுத்தியதாகவும், எனினும் அதற்காக நியாயமான காலம் தரப்படவேண்டும் என்று கோரியதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்காக நிபந்தனைகளை விதிக்கவேண்டாம் என்றும் தாம் கோரியதாகவும் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை சரிசெய்ய சிறிது காலம் பிடிக்கும். இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர, உண்மையில் கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .