திலித் ஜயவீர(Dilith Jayaweera) தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சிக்குள் அண்மைக்காலமாக அரசியல் சூறாவளியொன்று வீசத் தொடங்கியுள்ளது.
அதன் ஒருகட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சியின் சார்பில் போட்டியிடும் பலர் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.
தாய்க்கட்சியில் இணைவது தொடர்பில் ஆர்வம்
அத்துடன் கட்சியின் வடமேல் மாகாண முக்கியஸ்தராக செயற்பட்ட பஸ்நாயக்க உள்ளிட்ட பலரும் கட்சியின் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பொதுஜன பெரமுண கட்சியில் இருந்து அதிருப்தியுற்று சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து கொண்ட பலரும் மீண்டும் தங்களின் தாய்க்கட்சியில் இணைவது தொடர்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதுடன், அது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

