நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சித் தேர்தலில், போட்டியிட்ட 75,500
வேட்பாளர்களில் 66,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை தங்கள் தேர்தல் செலவுகளைச்
சமர்ப்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர், இதனை தெரிவித்துள்ளார்.
2,000 ஆவணங்கள்
தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட, இந்த தேர்தல் செலவு அறிக்கைகளின்
சான்றளிக்கப்பட்ட பிரதிகளை, 2025, ஜூன் 7 முதல், ஒவ்வொரு மாவட்ட தேர்தல்
அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு தழுவிய சுமார் 2,000 ஆவணங்கள் மட்டுமே பெறப்படவுள்ளன
இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் அறிக்கைகளே எதிர்பார்க்கக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

