அம்பாறையில் மின் கோபுரத்தில் அத்துமீறி ஏறி செம்புக் கம்பிகளை வெட்ட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனநாயக்கபுர தம்மதின்ன வீதியில் இடம்பெற்றுள்ளது.
சேனநாயக்கபுரவில் மூடப்பட்ட நிலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வைக்கப்பட்டுள்ள இடத்தில் அத்துமீறி நுழைந்த நபரே விபத்தில் பலியாகியுள்ளார்.
30 அடி உயர கோபுரம்
30 அடி உயர கோபுரத்தில் ஏறி செம்புக் கம்பியை அறுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர், நவகம்புர பிரதேசத்தைச் சேர்நதவர் என தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.