Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து 39 ஜனாதிபதி வேட்பாளர்களையும் மார்ச் 12 இயக்கம் இப்போது விவாதத்திற்கு அழைத்துள்ளது,
இந்த விவாதங்கள் கட்டங்களாக நடத்தப்படும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி செப்டம்பர் 7 ஆம் திகதியன்று திட்டமிட்டபடி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதம் நடைபெறும் என்று தெரிவித்து மார்ச் 12 இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
39 வேட்பாளர்கள்
முன்னதாக,39 வேட்பாளர்களில் 6 பேரை மாத்திரம் கொண்ட, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையான பெஃப்ரலின் உத்தேச விவாதத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
உத்தேச விவாதம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும் மார்ச் 12 இயக்கம், தமது விவாதம் பெஃப்ரல் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
ஆரம்பத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் தற்போது 39 ஜனாதிபதி வேட்பாளர்களையும் விவாதத்திற்கு அழைத்துள்ளதாகவும், விவாதம் கட்டம் கட்டமாக நடத்தப்படும் என்றும் மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.