புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் பூதவூடல் மக்கள் அஞ்சலிக் காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தலைவர் மாவை சேனாதிராசாவின் (Mavai Senathirajah) இறுதிக் கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பின்னர் காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்ற மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடைபெறவுள்ளது.
இல்லத்தில் அஞ்சலி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ஸ்ரீநாத், ஆறுதிருமுருகன் ஆகியோர் மறைந்த மாவை சேனாதிராஜாவிற்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராசாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/embed/alfUNcSwdL4