ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் மற்றும் முன்னாள் நோர்வே
வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்முக்கும் (Erik Solheim) வடக்கு மாகாண
ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸிற்கும் (P.S.M.Charles) இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (30.04.2024) மாலை வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின்
முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த
முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கை சிறுவர்கள் குறித்து அறிமுகமாகவுள்ள சட்ட திருத்தம்
ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |