முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்
விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சிகள் பலவற்றின் தலைவர்களுக்கும் இடையே நேற்று(10.10.2025) விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில்
இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பிவிதுரு ஹெல
உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்சீவ
எதிரிமன்ன மற்றும் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அரசியல் நிலைமை
தற்போதைய அரசாங்கம் நவம்பர் மாத நடுப்பகுதியில் ஒரு வருடத்தை நிறைவு
செய்யவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் குறித்து
விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள போராட்ட அமைப்பு
நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக
விவாதிக்கப்பட்டுள்ளது.

