ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் ) யாழ். மாவட்ட ஆதரவாளர்களுடனான
சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது கந்தரோடையில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் த.சித்தார்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
முன்னைய வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன், முன்னாள் சாவகச்சேரி
நகர சபையின் உறுப்பினர் கிஷோர், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.