கனடாவின்(canada) இறையாண்மையை காக்க போராடப்போவதாகவும் கனடா ஒருபோதும் விற்பனைக்கு அல்ல எனவும் ட்ரூடோவின்(justin trudeau) முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவரான ஜக்மீத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமெரிக்க(us) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(donald trump), கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக தெரிவித்து வருவதுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் எனவும் விமர்சித்து வருகிறார்.
எனினும் ட்ரம்பின் விமர்சனத்திற்கு ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது சாத்தியமில்லை என தெரிவித்து பதிலடி கொடுத்திருந்தார்.
டொனால்ட் ட்ரம்புக்கு கூறும் செய்தி
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சியான New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், டொனால்ட் ட்ரம்புக்கு நான் கூறும் செய்தி ஒன்று உள்ளது, கனடா விற்பனைக்கு அல்ல, இப்போதும் அல்ல, எப்போதுமே அல்ல, என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
விலை கொடுக்கவேண்டியிருக்கும்
கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற கடுமையாகப் போராட கனேடியர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றி எரிகிறது, அதை அணைக்க கனேடிய தீயணப்பு வீரர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள்.
அதுதான் கனேடியர்களாகிய நாங்கள், அதாவது, பக்கத்து நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் உதவி செய்ய ஓடோடி வருவோம்.
I have a message for Donald Trump.
We’re good neighbours.
But, if you pick a fight with Canada – there will be a price to pay. pic.twitter.com/o60c4qIyza
— Jagmeet Singh (@theJagmeetSingh) January 12, 2025
ஆனால், அதற்காக எங்களுடன் சண்டைக்கு வரலாம் என ட்ரம்ப் நினைப்பாரானால், அதற்கு அவர் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.
ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீது வரி விதிப்பாரானால், பழிக்குப் பழி நடவடிக்கையாக நாங்களும் வரி விதிப்போம். அடுத்து யார் கனடாவின் பிரதமராக வந்தாலும் அதைத்தான் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.