முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவப்பு பச்சை அரிசி தட்டுப்பாடு குறித்து விசேட அறிக்கை வெளியீடு

நாட்டின் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள சிவப்பு பச்சை அரிசி பற்றாக்குறை, முந்தைய அரசாங்கங்களின் தவறான நிர்வாகத்தின் விளைவாக ஏற்பட்டதாக வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, குற்றம் சுமத்தியுள்ளார். 

அதே நேரத்தில் நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். 

சிவப்பு அரிசி பலருக்கு, குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகையின் போது ஒரு முக்கிய உணவாக உள்ளது அரசாங்கம் புரிந்து கொள்கிறது. எனினும், இந்த பற்றாக்குறையின் பின்னணியில் உள்ள காரணங்களை தெளிவுப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  அரசாங்க நிர்வாகங்கள் 

பொதுவாக, சிவப்பு அரிசி விளைச்சல், வரலாற்று ரீதியாக மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிற பகுதிகளில் இருந்து பெறப்படுகிறது. 

சிவப்பு பச்சை அரிசி தட்டுப்பாடு குறித்து விசேட அறிக்கை வெளியீடு | Minister Of Trade Addresses Red Rice Shortage

2024ஆம் ஆண்டில், சிறு மற்றும் பெரும்போகப் பருவங்களில் மொத்தம் 277,315 ஹெக்டேயர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 1.1 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் விளைந்தது.

இருப்பினும், முன்னைய அரசாங்க நிர்வாகங்களால் வளங்களின் மோசமான முகாமைத்துவம் மற்றும் விநியோகம் காரணமாக, இப்போது குறிப்பிடத்தக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 2025ஆம் ஆண்டு வரவிருக்கும் பெரும்போக பருவத்தில் ஏற்கனவே 161,067 ஹெக்டேயர் பயிரிடப்பட்டுள்ளது.

இதன் விளைச்சல் 648,200 மெட்ரிக் தொன் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே 2025இல் பற்றாக்குறை ஏற்பட எந்தக்காரணமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.