மோகன்லால்
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் தயாரான படம் எம்புரான்.
லூசிபர் படத்தின் 2ம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லால் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 அக்டோபர் 5ம் தேதி ஃபரிதாபாத்தில் தொடங்கியது, பின் ஷிம்லா, ஐக்கிய அரபுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கி அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்களிலும் நடைபெற்றுள்ளது.
சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.. நல்ல ஐடியா தான்!
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
கலெக்ஷன்
ரிலீஸை நெருங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் படத்தின் புக்கிங் தாறுமாறாக நடந்து வருகிறது. ஓவர்சீஸில் முதல் நாள் புக்கிங்கில் மட்டுமே ரூ. 7 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.