முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி தப்பியோட்டம்

செம்மணி அணையாதீப போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டம் இறுதி நாளாக இன்று நடைபெற்றது.

 நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்

இன்றையதினம்(25) ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகை தந்திருந்த நிலையில் பாரிய போராட்டடாக முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,

“தமிழ்மக்களை டக்ளஸ் குழு, மற்றும் இலங்கை – இந்திய இராணுவங்களும் கொலை செய்துள்ளனர். இனிமேலும் இப்படியானதொரு யுத்தம் தோற்றுவிக்கப்பட கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கின்றோம்.

 மனிதப்புதைகுழி

எங்களுடைய அரசாங்கத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறவில்லை.

ஜேவிபியிலும் 60,000 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி தப்பியோட்டம் | Mp Ilankumaran Chemmani Mass Grave Protest Today

அதற்காகதான் இந்த மனிதப்புதைகுழியை தோண்டுவதற்கும் நிதியை ஒதுக்கியுள்ளோம். நான் எதற்கும் பயப்படவில்லை , தனியாகத்தான் வந்தேன்.பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் வரவில்லை.

முன்னைய அரசாங்கம் போலல்லாது ஐ.நா உறுப்பினர்களை கூட மக்கள் சந்திப்பதற்கு எங்களது அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எங்களது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுத்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வந்து வட்டிக்கு கொடுத்து கட்டபஞ்சாயத்து செய்யும் அரசியல்வாதிகள் தான் இவ்வாறான தாக்குதல் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

போராட்டத்திற்கு உடந்தை

சிறீதரனின் அடியாட்கள், பார் பர்மிட் எடுத்தவர்கள் தான் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி தப்பியோட்டம் | Mp Ilankumaran Chemmani Mass Grave Protest Today

மண்டையன் குழு, ஈபிடிபி போன்ற மக்களுடைய காணிகளை சுவீகரித்தவர்கள் தான் இந்த போராட்டத்தில் நிற்கின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்களை கொன்றவர்கள் தான் இந்த போராட்டத்திற்கு உடந்தையாக நிற்கின்றார்கள்.

ஆனால் நியாயமான எங்களை போன்றவர்களுக்கு இவ்வாறான அநீதி நடக்கின்றது.

நாங்கள் ஜனநாயகமான உரிமைக்கான பூரண ஆதரவை முழுமையாக பெற்றுக்கொடுப்போம். எங்களை விமர்சிக்கும் உரிமையை கூட உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

தமிழ் மக்களுக்கும் துரோகம்

பூரணமான உரிமையை நாங்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம் என்று நிம்மதியாக உள்ளோம்.

மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி தப்பியோட்டம் | Mp Ilankumaran Chemmani Mass Grave Protest Today

மற்றைய அரசாங்கங்களை போல்லாது நினைவு நாட்களை செய்ய அனுமதித்துள்ளோம், மாவீரர் தினநாட்களை செய்ய செய்ய அனுமதித்துள்ளோம்.

நான் இந்த இடத்திற்கு வருகை தந்திருக்கு மாட்டடேன், அசம்பாவிதம் இடம்பெற்றதால் தான் வருகை தந்தேன்.

நான் கடுகளவில் கூட எந்த தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன்” என தெரிவித்துள்ளார்      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.