முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹிட்: தி தேர்ட் கேஸ் திரை விமர்சனம்

நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள ஹிட்: தி தேர்ட் கேஸ் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைக்களம் :  

எஸ்.பி போலீஸ் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் (நானி) விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை கேஸை விசாரிக்கிறார்.

ஆனால், அந்த கொலையை அவரேதான் செய்திருக்கிறார். அதேபோல் இன்னொரு கொலையை அவர் செய்யும்போது சக பெண் போலீஸ் அவரை தடுக்க முயற்சிக்கிறார்.

எனினும் அவருடன் சண்டையிட்டு கட்டிப்போடும் அர்ஜுன், கொலையை செய்துவிட்டு ஏன் கொலைகளை செய்கிறேன் என விளக்குகிறார்.

அந்த பிளேஷ்பேக்கில், அர்ஜுன் சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் வேலை பார்த்தபோது அங்கே ஒரு சீரியல் கில்லரை கைது செய்கிறார்.

அவரிடம் விசாரணை நடத்தும்போதே பீகாரில் அதே பாணியில் கொலை நடக்க, அந்த கொலைகாரனையும் கண்டுபிடித்து ஒன்றாக விசாரிக்கிறார் அர்ஜுன்.

அப்போதுதான் ஒரு அதிர்ச்சிகர பின்னணி தெரிய வருகிறது. அதன் பின்னர் சீரியல் கொலைகளுக்கு யார் காரணம்? எதற்காக இதெல்லாம் பல மாநிலங்களில் நடக்கிறது? என்பதை அவர் எப்படி கண்டுபித்தார் என்பதே மீதிக்கதை. 

ஹிட்: தி தேர்ட் கேஸ் திரை விமர்சனம் | Nani Movie Hit Movie Review

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின் இவரா?

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின் இவரா?

படம் பற்றிய அலசல்:  

ஹிட் கேஸ் படவரிசையில் வெளியாகியுள்ள மூன்றாவது படம் இது. நானி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

முந்தைய இரு படங்களை ஒப்பிடும்போது இந்த பாகம் மிகவும் சீரியசான கதைதான்.

அர்ஜுன் சர்க்காராக வரும் நானி எப்போது கோபமான, இறுக்க முகத்துடனே இருக்கிறார்.

ஆனால் அவரது அப்பா சமுத்திரக்கனியை எப்போதும் சீரியசான முகத்துடன் கலாய்த்து நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.

சண்டைக்காட்சிகளில் பின்னிபெடலெடுத்து ருத்ர தாண்டவமும் ஆடியிருக்கிறார் நானி.

ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நல்ல கதாபாத்திரம். அவர் கொடுக்கும் ட்விஸ்ட் அட சொல்ல வைக்கிறது.

சீரியல் கொலைகள், அதனை விசாரிக்கும் போலீஸ் ஹீரோ கதை பயணிக்க, ஒரு பெரிய நெட்வொர்க்கை காலி செய்வது என பரபரப்பான திரைக்கதையை கச்சிதமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் சைலேஷ் கோலனு.

பல இடங்களில் வன்முறை சண்டைக்காட்சிகள் கண்ணை மூடிக்கொள்ளும் அளவிற்கு உள்ளதால், 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கக் கூடிய படம் இது.

ஹிட்: தி தேர்ட் கேஸ் திரை விமர்சனம் | Nani Movie Hit Movie Review

வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் ரத்தக்களரிதான்.

ஒரு சண்டையில் “உன்னால இங்க சர்வைவ் பண்ண முடியாது” என்று பெண்ணொருவர் கூற, “என் கேரியரின் ஸ்டார்ட்டிங்ல இருந்தே இத கேட்டுட்டு இருக்கேன்” என நானி கூறுவது அவரது விஸ்வரூப வளர்ச்சியை காட்டும் டையலாக்காக அமைந்துள்ளதால் தியேட்டரில் விசில் பறக்கிறது.

சனு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவு அருமை. மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை மிரட்டல்.

படத்தின் முடிவில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவரின் என்ட்ரி, ஹிட் கேஸ் 4கிற்கு லீட் செம. 

க்ளாப்ஸ்  

நானியின் நடிப்பு

சஸ்பென்ஸை கொண்டு சென்ற விதம்

பரபரப்பான திரைக்கதை

பல்ப்ஸ்  

அதீத வன்முறை நிறைந்த சண்டைக்காட்சிகள்

மொத்தத்தில் ரத்தக்களறியான கேஸை வேட்டையாடி முடித்திருக்கிறார்கள். ஹிட் சீரிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைவரும் கண்டு ரசிக்கலாம் இந்த ஹிட்: தி தேர்ட் கேஸை.  

ரேட்டிங்: 3.25/5

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.