அண்மையக் காலமாக தமிழ் அரசியல் கட்சிகளானது, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் கூட்டணிகளை அமைத்து அரசியல் களத்தில் பாரிய விமர்சனங்களிற்கு உள்ளாகி வருகின்றது.
காரணம், மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்த கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வந்த கட்சிகளும் தற்போது அரசியல் இலாபத்திற்காக தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் இணைந்துள்ளமை அதிருப்திக்குரிய விடயமாகும்.
இதன் தொடர்சியாகத்தான் தற்போது தமிழ் தேசிய மக்கள் முண்ணனியும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது.
இந்தநிலையில், குறித்த கூட்டணி தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் இது எதிர்பாராத ஒரு விடயமாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இது தொடர்பிலும், குறித்த கூட்டணியின் நிலைப்பாடு, தமிழ் அரசியல் களம், அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்ளூராட்சி ஆட்சியமைப்பு குறித்த பலதரப்பட்ட விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சார்ந்த காண்டீபன் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய களம் நிகழ்ச்சி, “
https://www.youtube.com/embed/D2fW1axnr1Q

