சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வட கொரிய அரச தலைவர் கிம் ஜாங்-உன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார்.
புதன்கிழமை நடைபெறும் “வெற்றி தின” அணிவகுப்பில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் கிம் இணைவார். பதவியேற்ற பிறகு கிம் நடத்தும் முதல் பலதரப்பு சர்வதேச சந்திப்பு இதுவாகும்.
கடுமையான பாதுகாப்பு
கிம் செவ்வாயன்று தனது உயர் பாதுகாப்பு கவச தொடருந்தில் சீனாவை வந்தடைந்தார், அதில் ஒரு உணவகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிம் திங்களன்று பியோங்யாங்கிலிருந்து புறப்பட்டார், ஆனால் கடுமையான பாதுகாப்பு காரணமாக தொடருந்து மெதுவாக நகர்ந்து வந்தது.

