முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அமைதி பேரணிக்கு அழைப்பு

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் எதிர்வரும்
10 ஆம் திகதி மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம்
அன்னராசா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்
இவ்வாறு கூறியுள்ளார்.

பூரண ஆதரவு

அவர் மேலும் தெரிவிக்கையில்,  வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு
இயக்கத்தின் அனுசரணையில் வடமாகாண கடற் தொழிலாளர்களும் இலங்கையின் ஏனைய
மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்களும் இணைந்து ‘மன்னார் மாவட்டத்தின் வளத்தை
பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் குறித்த பேரணியை முன்னெடுக்க உள்ளனர்.

குறித்த பேரணி ஊடாக இலங்கை ஜனாதிபதி,கடற்றொழில் அமைச்சர்,மாவட்ட அரசாங்க
அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வர உள்ளோம்.மன்னார் வளத்தை பாதுகாக்கும்
வகையில் அவர்களுக்கு மகஜரையும் கையளிக்க உள்ளோம்.

மன்னார் மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும்,பாதிப்பாக இருக்கின்ற கணிய மணல்
அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தி, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய
வருகை,சூழலுக்கும், மன்னார் மாவட்டத்திற்கு பாதிப்பான பண்ணை செயற்பாடுகளை
நிறுத்தக் கோரியும் குறித்த அமைதி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அமைதி பேரணிக்கு அழைப்பு | Northern Province Fishermen Internet Call Rally

குறித்த பேரணிக்கு யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஆதரவு வழங்க
உள்ளனர்.

எனவே அன்றைய தினம் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்,பொது அமைப்புக்களும் பூரண
ஆதரவை வழங்க வேண்டும் என அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்தார்.

இதன் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி
சங்கரும் கருத்து தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

Source: https://tamilwin.com/article/northern-province-fishermen-internet-call-rally-1725488960

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.