அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை(barack obama) எஃப்பிஐ அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் வைத்து கைது செய்வதை சித்தரிக்கும் ஏஐ காணொளியை பகிர்ந்து பெரும் சர்ச்சையைத் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த காணொளி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் வெளியிடப்பட்டது, இது அரசியல் ரீதியாக எதிர்விளைவைத் தீவிரப்படுத்தியது.
டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த காணொளியை பொறுப்பற்ற செயல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வெளிவந்துள்ள காணொளி
இந்த காணொளி ட்ரம்பின் கீழ் தற்போதைய தேசிய புலனாய்வு பணிப்பாளரான துளசி கப்பார்டின் பரபரப்பு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வந்துள்ளது.
2016 தேர்தல் முடிவை பாதிக்கும் முயற்சியில் ஒபாமாவும் மூத்த உளவுத்துறை அதிகாரிகளும் ட்ரம்ப்-ரஷ்யா கூட்டுக் கதையை ஜோடித்ததாகக் கூறும் 100 க்கும் மேற்பட்ட ஆவணங்களை துளசி கப்பார்ட் வெளியிட்டார்.
ஒபாமா பதவி விலகுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசத்துரோக சதி என்று அவர் இதை விவரித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/l2CcUy_vBPQ

