யாழ்ப்பாணம் காவல்துறை குற்றத்த தடுப்பு பிரிவினரால் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின்
வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 120 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் கைது செய்யப்பட்டவரிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

