யாழில் (Jaffna) மனைவி உயிரிழந்த மனவிரக்தியால் கணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (27.08.2024) கைதடி – நாவற்குழி, புது வீட்டுத்திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மனுவல் சூசைமுத்து (வயது 72) என்பவரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், அவரைப் பிரிந்த துயரத்தில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.